Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2 படத்தின் புது போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

மறைந்த எழுத்தாளர் கல்கி நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது.

இதில் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. அதன்பின் “பொன்னியின் செல்வன்-2” 2023ம் வருடம் ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |