கல்கியின் புகழ் பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தவர்கள் சமூக வலை தளங்களில் பல்வேறு விதமான மீம்சுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சில மீம்ஸ்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.அதாவது பூங்குழலியின் கொண்டையை வைத்து வடிவேலு ஸ்டைலில் ஒரு மீம்சை பதிவிட்டுள்ளனர்.
அதன்பின் பொன்னி நதி பாடலையும் நேசமணியையும் கனெக்ட் பண்ணி ஒரு மீம்ஸை போட்டுள்ளனர்.
இதனையடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களும் படத்தை சும்மா விடுவது போல் தெரியவில்லை. இந்த நாவலை படித்துவிட்டு வடிவேலு ஸ்டைலில் சும்மா தெறிக்க விடும் அளவுக்கு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
😂😂😂 pic.twitter.com/BaGeSRpk5j
— 🄰🅃🄲 ™ (@ATC_SPACES) October 1, 2022
மேலும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தின் நாவலை பார்த்து ஒரு டான்ஸ் ஆடுவது போன்று ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Mani sir after looking at the openings💃😂❤️ pic.twitter.com/rXkTIL5Fg2
— Mariyam (@mariyam_shifah) October 1, 2022