புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது.
அந்த வகையில், புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.