இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் பிரதீப் குமார் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பொம்மை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் அதே ஊரில் தெற்கு தெருவில் வசிக்கும் லியோ டால்ஸ்டாய் என்பருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று லியோ டால்ஸ்டாய் அவரது நண்பர்களாக செல்வம், சூர்யா, சேகர் ஆகியோருடன் பிரதீப் குமார் கடைக்கு பொம்மை வாங்க சென்றுள்ளனர்.
அப்போது பிரதீப் குமாருக்கும், லியோ டால்ஸ்டாய்க்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஓருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இந்த தகராறில் சூர்யா மற்றும் பிரதீப் குமாரின் உறவினர் சோபன் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்தவர்கள் தேனி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இருதரப்பினரும் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தகராறில் ஈடுபட்ட லியோ டால்ஸ்டாய், சேகர், செல்வம் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.