உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், பல துறைகளில் பல உயரம் தொட்டு, தமிழ்நாடு வெற்றிநடை தொடர வேண்டும்னு முதல்வர் கூறியிருக்கிறார். பொய் சொல்றதுல முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும், அந்த அளவுக்கு பொய்யராக மாறிவிட்டார்கள். ஒவ்வொரு அரசு துறையும் சீரழிச்சு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பை உருக்குலைத்து விட்டார் முதல்வர்.
முதலீடுகள் பெற்றது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முடியல. சட்டமன்றத்துல கூட வெள்ளை அறிக்கையை வைக்க முடியாமல் தவிச்சு கொண்டு இருக்கின்றார். இந்த லட்சனத்துல அதிமுக அரசு வெற்றி நடை போடுகிறதாம். அதுவும் உங்கள் பணத்தில், மக்கள் பணத்தை செலவழிச்சு விளம்பரம் செய்கிறார். யார் வீட்டு பணம் ? நான் சொல்லுகிறேன் , பழனிச்சாமியோட ஆட்சியில தமிழ்நாடு வெற்றி நடையல்ல…. வெத்து நடை போட்டு கிட்டு இருக்கு. முதல்வரோட வெத்து நடை தமிழ்நாட்டுக்கு தேவை இல்லன்னு இந்த தமிழகம் பதிலடி கொடுக்க தயாராகி விட்டது.
லட்சம் கோடியில் புதிய தொழில்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் தொழில்களை காப்பாற்றல. தமிழகத்தோட தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பை செய்கிற மாவட்டமா திருப்பூர் மாவட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருது. ஆனால் பத்து ஆண்டு காலமாக…. அதுல குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டு காலமாக…. பெரிய நிறுவனங்களாக இருந்தாலும், சிறு குறு நிறுவனங்களாக இருந்தாலும் செயல்பட முடியாம மூடும் நிலையில் இருக்கு. அதுக்கு பாஜக அரசும், மாநிலத்தை ஆளக்கூடிய அதிமுக அரசு தான் முழுமுதற் காரணம் என விமர்சனம் செய்தார்.