Categories
சென்னை மாநில செய்திகள்

பொய்யான அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம்…. மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் இருந்தால் அதற்கான அறிவிப்புகள் அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் மற்ற இணைய தளத்தில் பொய்யாக வெளியாகும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள துறைகளில் ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தால், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தமிழ்,ஆங்கில நாளிதழ்களிலும் மெட்ரோ ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள் வெளியிடப்படுகின்றன. எனவே வேலை தேடுபவர்கள் வேலைவாய்ப்பு விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதனை தவிர வேறு எந்த ஒரு இணையதளத்திலும் வெளியாகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலை வாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். பல்வேறு வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யான இணையதளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Categories

Tech |