Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொய்யான ஆதார் கார்டு வைத்து தங்கியிருந்த வங்கதேச வாலிபர் கைது… போலீஸ் விசாரணை …!!!

பொய்யான ஆதார் கார்டை வைத்து தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேச வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், வீரபாண்டி சவுடாம்பிகை நகர் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னும் பின்னும் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆதார் கார்டை கைப்பற்றி பார்த்தபோது அது பொய்யானது என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு கூட்டி  சென்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அவர் வங்காள நாட்டை சேர்ந்த 30 வயதுடைய ஆலமின் மியாமன் என்பதும், இவர் திருப்பூர்-பல்லடம் சாலை மீனாம்பாறை பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி அதே பகுதியில் இருக்கின்ற பனியன் நிறுவனத்தில் பனியன் காண்ட்ராக்ட் எடுத்து வேலை பார்த்து வந்ததும், தன்னிடன் தங்கியிருந்த மற்ற 2 பேரும் மீண்டும் நாட்டிற்கு தப்பித்துப் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் இவர் மட்டும் நிரந்தரமாக இங்கே தங்குவதற்கு பொய்யான ஆதார் கார்டு பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |