Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பொய்யான ஆவணங்கள் மூலம் இழப்பீடு தொகை…. விசாரணையில் தெரிந்த உண்மை…. 3 பேர் மீது வழக்கு….!!

காப்பீடு தொகை பெற பொய்யான ஆவணத்தை தயாரித்து கொடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், குகை பகுதியில் இருக்கின்ற காப்பீட்டு நிறுவனத்தில் சண்முகநாதன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகின்றார். இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியதாவது, கடந்த 2018 ஆம் வருடம் நடந்த விபத்தில் வீராணத்தில் வசித்துவந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மணிகண்டனின் மனைவி ஹேமலதா இழப்பீடு தொகை வழங்க சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், அவருக்கு ரூ 18 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக எங்கள் நிறுவன புலனாய்வு பிரிவு அலுவலர் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் இழப்பீடு தொகையை பெறுவதற்கு பொய்யான ஆவணம் தயாரித்து கொடுத்தது தெரிய வந்துள்ளது. இந்த பொய்யான ஆவணத்தை தயார் செய்வதற்கு உடந்தையாக இருந்த சேலத்தை சேர்ந்த செந்தில், தங்கமணி, வாழப்பாடியில் உள்ள ராஜமணி ஆகிய 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இப்புகாரின் பேரில் செந்தில், தங்கமணி, ராஜமணி ஆகிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |