Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பொய்யான செய்தி வருது…. மக்களிடம் பரப்பாதீங்க… கொரோனாவை பார்ப்போம் …!!

கொரோனா பரவலை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதுச்சேரியில் இல.கணேசன் எம்பி புதிய ஆளுநராக தேர்வு செய்யப்பட உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான பல்வேறு செய்திகள் தனக்கு வருகிறது. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உறுதி செய்யப்படாத செய்திகளை பதிவிடுவதை  மக்களிடத்தில் பரப்பு வதையும் தவிர்க்க வேண்டும். கொரோனா பரவில்லை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முழு கவனத்தையும் அதில் செலுத்துவோம்” என்று அத்தகைய செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Categories

Tech |