Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொய் சொல்கிறாரா பிரசாந்த் கிஷோர்..? மீண்டும் சவால் விடும் ஐ-பேக் …!!

தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவீர்கள் என கட்சி தலைவர்களிடம் பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பொய் சொல்லி விட்டாரா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், அதே போல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். திமுகவுக்கும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைப்பாளராக பிரசாந்த் கிஷோரும், அவரது ஐபேக் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க தேர்தலில் பாஜகவின் கை ஓங்கி இருப்பதால் மம்தா தோல்வியை சந்திக்க போவதாக பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சில மூத்த பத்திரிக்கையாளருடன் பேசிய உரையாடலை ஆடியோவுடன் சமூக வலைத்தளங்களில் மேற்கு வங்க பாஜக வெளியீட்டு பரவலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் தேர்தல் வெற்றி குறித்து கட்சித் தலைவர்களிடம் பிரசாந்த் கிஷோர் பொய் சொல்லி விட்டார் என்றும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பேட்டி ஒன்றில் வன்மையாக மறுத்துள்ள i-pac நிறுவன தலைவர் பிரசாந்த் கிஷோர்  தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து 50 இடங்களை கூட பிடிக்க முடியாது எனக் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் மேற்குவங்கத்தில் தான் பேசிய பேச்சை முழுமையாக பாஜக வெளியிடவில்லை என்றும், அங்கும் மம்தா பனர்ஜி  ஆட்சியை பிடிப்பது உறுதி என்றும், 100 இடங்களுக்கு மேல் பாஜக வென்றால் தமது தேர்தல் வியூக தொழிலையே விட்டு விடுவதாகவும் பிரசாந்த் கிஷோர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |