Categories
அரசியல்

பொய் சொல்கிறார்…. “செயல் பாபு” அல்ல அவர் ஒரு “ஸ்நேக் பாபு”…. ஹெச்.ராஜா கலாய்…!!!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிலைகள் திருடு போவதற்கு பூசாரிகள் பொறுப்பல்ல. ஏனெனில் கோவில் நிர்வாகம் அவர்களின் கையில் இல்லை. அதிகாரிகள் கட்டுப்பாடுகளில் உள்ளதால் அதற்கு அவர்களே பொறுப்பு. வேதபுரீஸ்வரர் கோயிலில் இருபதாயிரம் ஏக்கர் நிலங்கள் சர்வே பண்ணாமல் உள்ளது.

அதை சரி செய்வதற்காக நியமிக்கப்பட்ட புதிய அதிகாரி உடனடியாக மாற்றப்பட்டார். இதேபோல தமிழகத்தில் இன்னும் ஏராளமான கோவில்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆனால் அவை இன்னும் மீட்கப்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு பொய் சொல்கிறார். தமிழக அமைச்சர்கள் இலாக்காக்களை பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் சேகர் பாபுவை செயல் பாபு என்று சொல்கிறார். ஆனால் அவர் செயல் பாபு அல்ல. ஒரு ஸ்நேக் பாபு” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |