Categories
அரசியல்

பொய் சொல்றாரு…. தைரியமிருந்தா கேஸ் போடுங்க…. சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்…!!!

தமிழகத்தில் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிரம் பணிகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பாக தலைமை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்  சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் அதிமுகவுக்கு வெற்றி தேர்தலாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

அதிமுக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் பெருவாரியான வெற்றியைப் பெறும். திமுக ஆட்சியில் உள்ள குறைகள் எடுத்துக்கூறி வெற்றி வாகை சூடுவோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெற்று அதில் முறைகேடு நடந்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். கூட்டுறவு கடன் வாங்கியதில் முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்து பேசியுள்ளார்.

Categories

Tech |