கொரோனா நோய் குறித்த உண்மையை மறைத்ததற்காக சீனா மீது அமெரிக்கா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவிகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மீது அமெரிக்க கொரோனா நோய் குறித்த பல உண்மையாகளை சீனா மறைத்ததாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த இந்த வழக்கானது அடிப்படை ஆதாரங்களற்றதாக இருப்பதாகவும், சீனா அமெரிக்கா நீதிமன்றத்தின் எல்லைக்குள் வராது என்றும் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.