Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தீங்க…! இதெல்லாம் தெரியாதா ? அண்ணாமலை ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மாண்புமிகு நிதித் துறை அமைச்சர்….  புதுசா தமிழகத்தில்  ஃபேஷன் என்னவென்றால்…. படத்தை பார்த்துவிட்டு அதற்கு விமர்சனம் சொல்வது தான் பேஷன், அதேபோல நிதித் துறை அமைச்சரும் மூன்று பக்கத்திற்கு படத்துடைய விமர்சனம் மாதிரி எழுதி இருந்தார். மத்திய அரசு இப்படி செய்தது, மாநில அரசு இப்படி செய்தது என்று, ஒரே ஒரு கேள்வி மட்டும் தான். மார்ச் 13 – 2021 திமுகவின் தேர்தல் அறிக்கை கொடுத்த பொழுது இது எதுவும் உங்களுக்கு தெரியாதா ?

மத்திய அரசினுடைய வாட் பற்றி தெரியாதா ? மாநில அரசின் அமைப்பு பற்றி தெரியாதா ? தேசிய கச்சா எண்ணெய் பற்றி தெரியாதா ? மார்க்கெட் விலையில் பெட்ரோல் விலை என்ன இருக்கு என்பது தெரியாதா ? மத்திய அரசினுடைய கடைசி பட்ஜெட் நடந்தது பிப்ரவரி 2021, மார்ச் 13 2021 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையை போட்டுவிட்டார்கள், தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசலை 5 ரூபாய் 4 ரூபாய் குறைப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அறிக்கை வந்த நாளன்று இன்று இவ்வளவு விஞ்ஞானம் பேசக்கூடிய நிதி துறை அமைச்சருக்கு அறிக்கை வெளியான அன்றைக்கு எதுவுமே தெரியாதா ? எப்படி இருக்கு நம்முடைய சிஸ்டம், வரிவிதிப்பு சிஸ்டம் எதுவுமே தெரியாமல் இன்றைக்கு பொய் சொல்கிறார்கள், இது முழுவதுமே பொய்,இந்த வாதத்தை ஆரம்பித்த எந்தக் கட்சியுமே எந்த ஒரு மாநிலத்திலுமே தேர்தல் அறிக்கையாக கொடுக்கவில்லை.

புதுச்சேரியில் தேர்தல்அறிக்கை கிடையாது, ஆனால் புதுச்சேரியில் ஒன்பது ரூபாய் குறைத்திருக்கிறார்கள், உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் அறிக்கை கிடையாது, அங்கு 13 ரூபாய் குறைத்து இருக்கிறார்கள், கர்நாடகாவில் தேர்தல் அறிக்கை கிடையாது, நாம் கேட்கின்ற ஒரே ஒரு கேள்வி தேர்தல் அறிக்கையிலே 5 ரூபாய் 4 ரூபாய் குறைப்போம் என்று சொல்லிவிட்டு இந்த விஞ்ஞானம் பேசக்கூடாது.

நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை, நீங்கள் வேறு ஏதோ காரணம் சொல்கிறார்கள் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, அப்படி என்றால் நீங்கள் பொய் சொல்லி தான் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்தீர்களா ? என்பதையும் மக்களுக்கு சொல்லிவிடுங்கள், இந்த போராட்டத்தை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |