பைக் வீலிங் தெரியும் என்று பொய்சொல்லி இயக்குனர் பாண்டிராஜிடம் மாட்டிகொண்ட சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி 2012-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.தற்போது அவர் திரைக்கு வந்து 10 வருடங்கள் நிறைவடைந்தது கொண்டாடினார். இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது முதல் படமான மெரினா படத்தின் ஆடிஷன் பற்றி முன்பு ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசியிருந்ததை பார்க்கலாம்.இயக்குனர் பாண்டிராஜ் உங்களுக்கு பைக் வீலிங் தெரியுமா என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, அதற்கு அவர் தெரியும் காலேஜ் படிக்கும்போது செய்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் நிஜமாகவே அவருக்கு அது தெரியாது.படப்பிடிப்பிற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது என்று அதற்குள் கற்றுக் கொள்வோம் என நினைத்திருக்கிறார். ஆனால் மறுநாளே இயக்குனர் பாண்டிராஜ் ஷூட்டிங்குக்கு வரச்சொல்லி சிவகார்த்திகேயனுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் பொய் சொல்லி சிக்கிக்கொண்டார்.