பொய் பிரசாரம் செய்து அரசியல் செய்யும் சூழல் நாட்டில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பொய் பிரசாரம் செய்து அரசியல் செய்யும் சூழல் தான் நாட்டில் உள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகும் என்ற பொய் பிரச்சாரத்திற்கு எப்படி பதில் சொல்ல முடியும். வேளாண் சட்டங்களால் வரக்கூடிய ஆதாயம் வேண்டாம், இடைத்தரகர்களின் ஆதாயம் முக்கியம் என எதிர்க்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.