Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போட்ட காவல்துறை…. களமிறங்கிய நீதித்துறை …. ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ….!!

பொய் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறி காவல் துறையை கண்டித்து, வழக்கறிஞர்கள் 160 பேர் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் வினாயக், விஜய கமலன் ஆகிய இருவர் மீது நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் இட பிரச்னை ஒன்றில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று நாகப்பட்டினம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 160 பேர் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து காவல் துறைக்கு எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தி, நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொய் வழக்குப்பதிவு செய்ததாக நாகை காவல் துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பிய வழக்கறிஞர்கள், காவல் துறை வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

Categories

Tech |