சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி மற்றும் ஓபிஎஸ் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது நத்தம் விஸ்வநாதன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது, பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். இதேபோன்று அரசியலில் போலி என்றால் அது ஓபிஎஸ். அவர் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.