தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இவ்வாறு மக்கள் வாங்கும் ரேஷன் பொருட்கள் வாங்கியவுடன் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு ரேஷன் கடையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஆனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக SMS வருவதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொருட்கள் வழங்காமல் வழங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பினால், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே, போலி பில் போடும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மீது மக்கள் புகார் தெரிவிக்கவும்.