இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார வளர்ச்சியானது அதள பாதாளத்திற்கு சென்றது என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் கோவிட் 19 பெருந்தொற்று, உற்பத்தி குறைவு ஏற்றுமதியில் சரிவு போன்ற பல காரணங்களை கூறலாம். சென்ற நிதியாண்டின் ஜீன் காலாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி அடைய எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் 13.1% உயர்ந்துள்ளத அதனைத் தொடர்ந்து GDP என்பது நாட்டின் உற்பத்தி, வேலை வாய்ப்பு, ஏற்றுமதி என அனைத்து வளர்ச்சிகளையும் குறிக்கும். அதில் Nominal GDP மற்றும் Real GDP என இரு வகைகள் உள்ளது. இதில் Nominal GDP என்பது நடப்பு பொருளாதாரம் நிகழ்வுகளை குறிக்கும். ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட Real GDP தான் அவசியம்.
ஏனென்றால் அதில் தான் நாட்டின் பண வீக்கம் மற்றும் அனைத்து துறைகளின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை கணக்கிட முடியும். மேலும் நாட்டின் பண வீக்கத்திற்கான காரணங்களை கண்டறியவும் உதவுகிறது. இதனையடுத்து 13.1% GDP வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கிய சர்வீஸ் துறைகள் ஆகும். அதாவது நாட்டின் சுற்றுலாத்தலங்களில் வெளிநாடு சுற்றுலா பயணங்களில் வருகை அதிகரித்துள்ளது. ஹாட்டல்களில் சேவையும் உயர்ந்துள்ளது. அடுத்து உற்பத்தி தொழிற்சாலைகள் 8% வளர்ச்சியும் வேளாண்மை துறையும் நல்ல வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு நிதியானின் முதல் காலாண்டில் ரூ.33,923.04 கோடி வெறும் வரிகள் மூலமே வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக மதுபான விற்பனைகளின் அதிக அளவு, மழை அதிக அளவு பெய்தாலும் வேளாண்மை துறை முக்கிய பங்கு வகித்து, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. அதனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.