சீனாவில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பொருளாதாரம் 0.4% வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அந்த நாட்டில் கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமுடக்கம் நீண்ட காலம் அமல்படுத்தியிருந்தனர். நீண்டதொரு பொதுமுடக்கத்திற்கு பின் கடந்த மே மாதம் தான் மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இருக்கிறது.
மேலும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகின்ற போது தொழில் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு நிலையான மீட்பு நடைபெற்று வருவதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஜனவரி – மார்ச் காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 2.6% சரிவை சந்தித்துள்ளது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வரிகளை திரும்ப தருவதாகவும், இலவச வாடகை உள்ளிட்ட விதிகளை வழங்குவதாகவும் உறுதியளித்திருக்கின்ற நிலையில் இந்த வருடம் 5.5 என்ற பொருளாதார இலக்கை அடைய தவறிவிடும் என பொருளாதார நிபுணர்கள் கருதி வருகின்றனர்.