அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டில் 33 சதவீதம் இழப்பை சந்தித்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையின்றி திண்டாடி வருகின்றனர்.
அமெரிக்க பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 33 சதவீத இழப்பை சந்தித்து இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொருத்தவரையில், 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிகவும் மோசமான வீழ்ச்சியை கண்டிருக்கிறது. இதற்கு முன் ஜனவரி-மார்ச் காலங்களில் 5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. அதே சமயத்தில் சென்ற ஆண்டில் நுகர்வோர் செலவினங்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருந்தது.
வணிகம் மற்றும் முதலீடுகள் பெரும் சரிவை சந்தித்தன. 10 லட்சத்திற்கும் மேலான மக்கள் வேலையின்மை காரணத்தால் அரசிற்கு விண்ணப்பம் விடுத்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.இத்தகைய சூழ்நிலையில் இருந்து மீள முடியாமல் டிரம்ப் நிர்வாகம் திண்டாடி கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.