மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 22 ஆம் வருடத்திற்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஜனவரி 31-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். பிப்ரவரி ஒன்றாம் தேதி 2022-ம் நிதி ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே அதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு இருக்கையை சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.
வரும் 2022 – 23 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சுமார் ஒன்பது சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வு அறிக்கையில் கணிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொருளாதார ஆய்வறிக்கை என்பதை நமது நாட்டின் பொருளாதாரத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையை என்றே சொல்லலாம். இது எப்போதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் நாட்டின் பொருளாதாரம் நிலை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் பற்றி இதில் வழக்கமாக இருக்கும் அதே போல எடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றியும் இதில் கூறப்பட்டிருக்கும்.
இவை வருங்காலத்தில் எதிர்கால கொள்கை முடிவுகளை குறிப்பதாக அமைகின்றது. பொதுவாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்களால் தான் இந்த பொருளாதார ஆய்வு அறிக்கை எழுதப்படுகிறது. ஆனால் இந்த வருடம் கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஆனந்த நாகேஸ்வரனை தலைமை பொருளாதார ஆலோசகராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அதனால் இந்த வருடம் முதன்மை பொருளாதார ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளால் இந்த ஆவணம் தயார் செய்யப்படுகின்றது. முன்னதாக கடந்த 2014 ஆம் வருடம் பாஜக அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை கூட மூத்த பொருளாதார ஆலோசகர் இலா பட்நாயக்கால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால் அந்த சமயத்தில் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன் அப்போது தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதனால் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி காலியாக இருந்ததால் இலா பட்நாயக் அந்த வருடத்திற்கான ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளார். இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020 – 21 ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வரை சரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கடந்த ஆண்டு இதேபோல வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. ஆனால் தேசியப் புள்ளியில் அலுவலகம் இந்த வருடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 ஆக இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.