இலங்கை நாட்டிற்கு இதுவரையிலும் 4 லட்சம் டன்டீசல் அனுப்பியிருப்பதாக இந்திய தூதரகமானது தகவல் தெரிவித்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டிற்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிவருகிறது. இதில் கடன் எல்லை மற்றும் கடன் மாற்று திட்டங்கள் வாயிலாக 3 பில்லியன் டாலருக்கு மேல் கடன் உதவி வழங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடன் எல்லைக்கு உட்பட்டு டீசலும் வழங்கப்பட்டு வருகிறது.
இவற்றில் இறுதியாக நேற்றும் இந்தியா வழங்கிய டீசலுடன் கப்பல் ஒன்று அந்நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. இதனையும் சேர்த்து இந்தியா இதுவரையிலும் 4 லட்சம் டன்னுக்கு மேல் அந்நாட்டிற்கு டீசல் உதவி வழங்கி இருப்பதாக கொழும்புவிலுள்ள இந்திய தூதரகமானது தெரிவித்துள்ளது.