Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை…. இன்று முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்…. அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவிக்கும் இலங்கை நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் ஆகிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. தினசரி 13 மணிநேரம் வரை மின் வெட்டு நிலவுகிறது. இந்நிலையில் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுதும் அரசு அலுவலகங்களை இன்று முதல் மூட அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

அதே சமயம் சுகாதாரத்துறை பற்றிய அலுவலகங்கள் இயங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் கடும் மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு பொருளாதார நெருக்கடி மற்றும் எரிப்பொருள் தட்டுப்பாடால் அந்நாட்டு மக்களின் துயரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

Categories

Tech |