காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பாட்ரிஷியா ஸ்காட்லாந்து இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக பாட்ரிஷியா ஸ்காட்லாந்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அவர் காமன்வெல்த் கூட்டமைப்பில் மொத்தம் 56 நாடுகள் இருக்கிறது. இந்த அமைப்பு 256 கோடி மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்திய தாராளமாக உதவுவது வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு காமன்வெல்த் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்கிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்திய பிரதமர் மோடி தாராளமாக உதவிகளை செய்து வருகிறார். இந்தியா 3.8 பில்லியன் டாலர் நிதி உதவியை செய்துள்ளது. உலக அளவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நாடுகளில் உணவு பற்றாக்குறை நிகழ்கிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் பருவநிலை மாறுபாடு காரணமாக பசி கொடுமையால் மக்கள் வாடுகின்றனர்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது உணவு பற்றாக்குறையை தீர்ப்பதற்காக புதிதாக சாசனம் அமைக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்தது. இந்த சாசனம் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியா போன்ற நாடுகளுடன் நெருங்கி செயல்பட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் வழி செய்கிறது.
பருவநிலை மாற்றத்தை இந்தியா சிறப்பாக எதிர் கொள்கிறது. புதுமையான வளர்ச்சிகளை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கியப்பங்கு வகிப்பதால் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது. மேலும் நிலம், எரிசக்தி பரிமாற்றம் மற்றும் ஓசோன் படலம் போன்றவற்றில் காமன்வெல்த் அமைப்பின் அனுபவத்தை இந்தியாவுக்கு வழங்கி உதவி செய்வதற்கு காமன்வெல்த் தயாராக இருக்கிறது என்றார்.