இலங்கை நாட்டில் சென்ற 9-ஆம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து அட்டகாசம் செய்தனர். இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாளிகைக்குள் வருவதற்கு முன்னதாக அதிபர் கோத்தபயராஜபக்சே அங்கு இருந்து வெளியேறிவிட்டார். அவர் நாட்டைவிட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் கோத்தபய அந்நாட்டில்தான் உள்ளதாக சபாநாயகர் கூறினார்.
இதற்கிடையில் அதிபர் இன்று பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமானப் படை விமானம் வாயிலாக அதிபர் கோத்தபயராஜபக்சே மாலத்தீவு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் தன் குடும்பத்தினருடன் மாலத்தீவு தப்பிச்சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.