Categories
உலக செய்திகள்

பொருளாதார மீட்சிக்கான இலங்கையர்களின் முயற்சிக்கு ஆதரவு…. இந்திய தூதரகம் டுவிட்….!!!!!

இலங்கை நாட்டில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அங்கு இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார். இந்நிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை துவங்கியது. அதன்பின் உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதன்படி இலங்கையின் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோத்தபய பதவிக்காலமான 2024 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரம சிங்கே அந்நாட்டு அதிபராக பதவியில் நீடிப்பார்.

இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு இந்திய தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “இலங்கை அரசியலமைப்பின் சரத்துகளுக்கு அமைவாக இலங்கை பாராளுமன்றம் மேன்மை தங்கிய ரணில் விக்கிரம சிங்கே அவர்களை அந்நாட்டு ஜனாதிபதியாக இன்றைய தினம் தெரிவு செய்துள்ளது. அந்நாட்டின் நெருங்கிய நண்பனாகவும், அயல்நாடாகவும், சக ஜனநாயக அரசு என்ற ரீதியிலும் ஜனநாயக முறைமைகள், பெறுமானங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள், அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பூடாக ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான இலங்கையர்களின் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் நாம் ஆதரவாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |