சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் வரை சுமார் 3000 கிலோ மீட்டர் தூரத்திற்கு 600 கோடி டாலர் செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் காஷ்மீர் வழியாக செல்வதால் இதற்கு இந்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக பாகிஸ்தான் அதிபர் நான்கு நாள் பயணமாக சீனா சென்றார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் அதிபர் சீனாவின் பீஜிங் மாகாணத்தில் சீனாவின் தேசிய சீர்திருத்த ஆணையத்தின் தலைவரை சந்தித்தார். இதனை தொடர்ந்து சீனா பாகிஸ்தான் இடையேயான தேசிய பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை தொடங்க பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டார். பின்னர் இருவரும் அன்னிய நேரடி முதலீட்டை கவர்வது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் பேசுகையில், “இந்த புதிய வழித்தட இரண்டு நாடுகளும் நல்ல பலன்களைத் தரும்.” என கூறினார்.