Categories
உலக செய்திகள்

பொருளை தொட்டால் கொரோனா பரவுமா?… சிடிசி அளித்த விளக்கம்…!!!

பொருள்களை தொட்டால் கொரோனா பரவுமா என்ற கேள்விக்கு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் எதன் மூலம் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் உள்ளனர். அசுத்தமான மேற்பரப்பை தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் எளிதாக பரவுவதில்லை. ஆனால் காற்றின் மூலம் தான் வேகமாக பரவுகிறது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பொருட்கள் மீது கிருமி நாசினிகள் தெளிப்பதை விட, சோப்பும் தண்ணீரும் கொண்டு மேற்பரப்பு களையும் கைகளையும் சுத்தம் செய்வது மிக மிக அவசியம். முக கவசம் சமூக இடைவெளி மிகவும் அவசியம் என்று அந்நிறுவனம் வழிகாட்டுதல் அளித்துள்ளது.

Categories

Tech |