கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வர்த்தகம் தொழில்துறை கணிசமான அளவில் வளர்ச்சியை எட்டி வருகிறது. எனவே அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய பிரான்சைஸிஸை வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றன.
எனவே சுயமாக தொழில் செய்ய விரும்புவோர் அல்லது எக்ஸ்ட்ரா வருமானம் பெற விரும்புபவர்கள் அமேசானின் பிரான்சைஸ் மூலமாக பணம் சம்பாதிக்க I Have Space என்ற திட்டத்தில் இணையலாம்.
பொதுவாக பிரான்சைஸ் பெற வேண்டும் என்றால் நிறைய முதலீடு செய்ய வேண்டும். ஆனால் அமேசானில் முதலீடு செய்ய செலவு குறைவு. பொருளை சேமித்து வைக்க இடம் இருந்தால் மட்டுமே போதும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு பொருளுடைய டெலிவரிக்கு உங்களுக்கு கமிசன் கிடைக்கும். இது ஒரு நல்ல திட்டம். இதில் இணைவதற்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவை கிடையாது. ஆனால் இதில் இணைய ஒரு ஸ்மார்ட் போனும் இருசக்கர வாகனம் மற்றும் பொருட்கள் சேமிக்க தேவையான இடம் இருந்தால் போதும். எனவே எக்ஸ்ட்டா வருமானம் பெற விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.