Categories
சினிமா தமிழ் சினிமா

பொறந்தா தமிழனா பொறக்கனும்… தண்ணியில மிதக்கனும் – பாட்டு பாடி மகிழ்ந்த மன்சூர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் தியாகராய நகர், கோடம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சுரங்க பாதைகளில் உள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் தனது வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழை வெள்ளத்தில், பாத்டப்பில் அமர்ந்துகொண்டு பொறந்தா தமிழனா பொறக்கணும், சென்னையில் தண்ணியில மிதக்கணும் என்ற பாடலை படித்துக்கொண்டு மன்சூரலிகான் படகு ஓட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |