தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு காலியிடங்களை நிரப்புவதற்கு வரும் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.பொறியியல் படிப்பில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ளஅரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆன்-லைன் வழி கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ஆம் தேதிக்குள் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான ஏஐசிடிஇ இந்த அவகாசத்தை வழங்கியுள்ளது.மேலும் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகம் ஆண்டு மாணவர்களுக்கு 15ஆம் தேதி முதல் ஒருங்கிணைப்பு வகுப்புகளை தொடங்க வேண்டும்.வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் முதலாமாண்டு மாணவர்களுக்கான பாட வகுப்புகளை தொடங்கி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.