Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பொறியியல் கல்லூரிகள் இணைப்பு… முழு அதிகாரமும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உண்டு… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கும் அதனை நிறுத்தி வைப்பதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், அந்த இரண்டு கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்புடைய கல்லூரிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், “பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுப்பதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனு தொடர்புடைய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கும் அதனை நிறுத்தி வைப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் இருக்கின்றது. அதுமட்டுமன்றி தரமான கல்வியை வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது பற்றி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வரையில் இணைப்பு நிறுத்தி வைப்பு உத்தரவை அமல்படுத்த கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |