Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரி மாணவர்களே!…. தேர்வில் இதை பண்ணாதீங்க…. அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு தொடர்பில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் ஹால் டிக்கெட்டுகளில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தேர்வை எழுத வேண்டும்.

தேர்வு நுழைவு சீட்டில் பாடங்கள் மற்றும் பெயரில் பிழைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும் தங்களுடைய வீடு அல்லது தாங்கள் தங்கும் இடத்தில் இருந்து எழுத வேண்டும். அதேபோல் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக மாணவர்கள் பாடத்துக்கான வினாத்தாள் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். .

அதேபோல் விடைத்தாளில் பாட குறியீடு எண், பதிவு எண் தவறாக இருந்தாலோ ( அல்லது ) தேர்வுக்கு தொடர்பில்லாத எழுத்துக்கள், குறியீடுகள் இருந்தாலோ அந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது. விடைகளை தட்டச்சு செய்யவும் அனுமதி இல்லை. விடைத்தாளில் பாட புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட நகலின் நிழற்படங்களை ஒட்டக்கூடாது.

தேர்வு நேரம் முடிந்த பிறகு மாணவர்கள் தங்களுடைய விடைத்தாளை 60 நிமிடங்களுக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கல்லூரி வழங்கிய இ-மெயில் அல்லது ஆன்லைன் முகவரியில் அனுப்ப வேண்டும். விடைத்தாள்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அனுப்பினால் மதிப்பீட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்படாது. அதேபோல் ஒரு வாரம் முழுவதும் நடைபெற்ற தேர்வுகளின் அசல் விடைத்தாள்களை தபால், கொரியர் உள்ளிட்ட வழிகளில் அந்த வார இறுதி நாளில் கல்லூரி முதல்வருக்கு அனுப்ப வேண்டும்.

எந்த காரணம் கொண்டும் விடைத்தாள்களை கல்லூரிகளுக்கு நேரில் சென்று வழங்கக்கூடாது. அதேபோல் அலுவலகத்தில் ஏற்கனவே உள்ள மாணவர்களின் கையெழுத்தும், விடைத்தாள்களில் உள்ள மாணவர்களின் கையெழுத்தும் சரியாக பொருந்துகிறதா என ஆய்வு செய்யப்படும். அப்போது கையெழுத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாக கருதப்படும் என்று வழிகாட்டு முறைகளில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |