பொறியியல் சேர்க்கையில் பொதுப்பிரிவு மற்றும் தொழில் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகின்றது.தமிழகம் முழுவதும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 140 இடங்களில் பயில்வதற்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய கவுன்சிலிங்கில் சிறப்பு பிரிவினரான மாற்றுத் திறனாளிகள்,விளையாட்டு வீரர்கள்,முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் போன்றோர் பங்கேற்றனர. இந்நிலையில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியுள்ளது. நான்கு கட்டங்களாக நடக்கவிருக்கின்ற இந்த கலந்தாய்வானது அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.