அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிடிஇ குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஏஐசிடிஇ மின் & மின்னணு பொறியியல், கணினி அறிவியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல என்றும் அறிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக பேஷன் டெக்னாலஜி, கட்டிடக்கலை பயோடெக்னாலஜி, தோல் பதனிடுதல், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட மூன்றில் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.