தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. மூன்றாவது கட்ட கலந்தாய்வு முடிவுகள் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் மூன்றாவது வாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தப்பட வேண்டுமென தொழில்நுட்ப கல்வி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பொறியியல் மாணவர் சேர்க்கை பணிகள் நவம்பர் 13ம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.