பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அடுத்ததாக பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 14ஆம் தேதி வரையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 1,60,834 மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாகவும், பதில் 1,31,436 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயத்தில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்வதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, பின்னர் சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவ மாணவிகள் அனைவருக்கும் உரிய ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டிருக்கிறார்.