Categories
மாநில செய்திகள்

பொறியியல் பாடத்திட்டம் மாறப்போகுது?…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

பொறியியல் கல்லூரிமாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கு “நான் முதல்வன் திட்டம்” தொடங்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியதாவது ” மாநிலம் முழுதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக இருக்கின்றன. வருகிற ஆண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஓரளவுக்குதான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஆகவே திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. வரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கு “நான் முதல்வன் திட்டம்” தொடங்கப்பட்டு உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பாடத்திட்டம் மாற்றப்பட இருக்கிறது.

வேலை வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கென்று தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள்- பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை. பின் தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Categories

Tech |