நடப்பு கல்வி ஆண்டு முதல் முதலாம் வருட பொறியியல்மாணவா்களுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலை அறிவித்திருந்தது. அந்த வகையில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு 2-வது பருவத்திலேயே புதிய பொறியியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அண்ணாபல்கலை திட்டமிட்டுள்ளது. இப்போது நடைமுறையில் உள்ள பொறியியல் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ 25 வருடங்கள் ஆகவிட்டதாக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையில் பொறியியல் படிப்பினை முடிக்கும் மாணவா்களுக்கு பணி கிடைப்பதில் தொடா்ந்து சிக்கல் இருந்து வருகிறது. இந்நிலையில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என்று உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி அறிவித்திருந்தாா்.
இந்தநிலையில் பொறியியல் படிப்பிற்கான 4 வருட பாடத்திட்டங்களும் மாற்றப்படவுள்ளது. முன்பே நடைமுறையில் இருந்து வரக்கூடிய முதலாம் வருடத்திற்கான பழைய பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டத்துக்கு கல்விக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதில் பொறியியல் கல்லூரிகளில் நவம்பா் 1ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது. முதலாமாண்டு பயிலும் மாணவா்களைத் தொடா்ந்து அடுத்தடுத்து 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு, 4ஆம் ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. பேராசிரியா்கள் மாணவா்களுக்கு அதிகளவில் கற்பிக்கும் அடிப்படையில் பாடத்திட்டம் முன்பே அமைக்கப்பட்டிருந்தது.
எனினும் புதிய பாடத்திட்டம் தொழில்துறையினா் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் அடிப்படையில் அமைக்கப்பட உள்ளது. அந்த புதிய பாடத் திட்டத்தில் இந்திய தொழிற்கூட்டமைப்பு, மகேந்திரா, எல் அண்ட் டி ஆகிய தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் என்று தெரிகிறது. மாணவா்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப மாணவா்களைத் தயாா்படுத்தும் பொருட்டும் புதிய பாடத்திட்டம் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இதில் புதிய பாடத்திட்டங்கள் நடப்பு கல்வியாண்டிற்குள் எழுதி முடிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவா்களுக்கான வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும் என்று தெரிகிறது.