Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு….!!!!

கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து பாதிப்பு குறைந்த நிலையில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 1 வார காலத்திற்கு முன்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 2021-22 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தனியார் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர். இதில் பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |