தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மூடப்பட்டு, ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடைபெற்று வந்தன. அதன்பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அடுத்த செமஸ்டர் பாடத்திட்டங்களுக்கான வகுப்புகள் மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்முறை தேர்வுகள் ஜூன் 18 முதல் தொடங்கும் எனவும் நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுகள் முடிந்து, விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் ஆகஸ்ட் 10-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.