அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (AIMO) அண்ணா பல்கலை, சுயநிதி வல்லுநர்கள், கலை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கூட்டமைப்புடன் இணைந்து கிண்டி பொறியியல் கல்லூரியிலுள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் ஏப்ரல் 23, 24 போன்ற தேதிகளில் டெக்னோ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அவ்வாறு கருத்தரங்கு நடைபெறும் இடத்திலே சில நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்பாட் நேர்காணலை நடத்த இருக்கிறது. இது தவிர கருத்தரங்கின் போது மாணவர்களின் திறனை நிறுவனங்கள் கண்டறியும் அடிப்படையில் talent fair நிகழ்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் 2-ம் செமஸ்டர் முதலே திறன்வாய்ந்த மாணவர்களை கண்டறியும் நிறுவனங்கள், கல்வி முடியும் வரையிலும் அவர்களுடன் இணைந்திருப்பது மட்டுமின்றி கல்லூரி படிப்பை முடிக்கையில், வேலை வழங்கிட தயாராக இருக்கும். இதனிடையில் கருத்தரங்கின்போது வளர்ந்து வரக்கூடிய 7துறைகளைச் சார்ந்த பேச்சாளர்கள் சாத்தியமான வேலைவாய்ப்புகளையும், அவர்களது எதிர்பார்ப்புகள் தொடர்பாகவும் மாணவர்களுக்குத் தெரிவிப்பார்கள். இந்தியா முழுவதும் இருந்து சுமார் 7,000 மாணவர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், திறப்பு விழாவின்போது 50 மாணவர்களுக்கு பணிநியமன ஆணையும் வழங்கப்படவுள்ளதாக AIMO தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.