தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் பாட பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வில் பங்கேற்ற இடங்களை தேர்வு செய்த பட்டியல் இன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதனை மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.