தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்தது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 1,43,774 பேருக்கு இன்று ரேண்டம் எண் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று மாலை 4 மணிக்கு tneaonline.org என்ற இணையதளத்தில் ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.