Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பொறியியல் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர் சேர்க்கையும் முடிவடைந்துள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மூன்றாவது வாரம் முதல் நேரடி முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செமஸ்டர்,செய்முறைத் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் கட்டாயம் நேரடியாக தான் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |