தமிழகத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் கடந்த ஜூலை 26ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடந்தது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியுடன் முடிந்தது. நடப்பாண்டு கொரோனா அச்சம் காரணமாக நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாத காரணத்தால் மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தனர். இதையடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஒற்றை சாளர ஆன்லைன் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தரவரிசைப் பட்டியல் உடன் சேர்த்து மாணவர்களின் ஜாதி வாரியான மற்றும் சிறப்புத் தகுதி ஒதுக்கீடுகள் அடிப்படையில் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எந்த கட் ஆப் மாணவர்கள் எந்த நாளில் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இன்று அறிவிக்கப்படும்.