தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்று முன் வெளியிட்டார். வருகின்ற இருபதாம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட பிறகு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இந்த ஆண்டு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.மேலும் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு செயற்கையில் இரண்டு சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அரசு பள்ளியில் பயின்று பொறியியல் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.