தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 5 ஆம் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடந்து முடிந்தது.
இந்த கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதன்படி ராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியிலும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்தது. அதன் மூலம் நடப்பு கல்வியாண்டில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அப்போது மாணவர்கள் கல்விச் சான்றிதழ் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். கொரோனா நோய்த்தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். மேலும் நவம்பர் 8ஆம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.